சுவிட்சர்லாந்தில் தமிழ் எதிர்-காப்பகங்கள்
«ஏன் அவர்கள் எங்களை நம்பவில்லை என்று எனக்குத் தெரியவில்லை», என்ற தலைப்பில், இந்த மாலை Canopy Session நடைபெற இருக்கிறது. இது “சுவிட்சர்லாந்தில் தமிழ் எதிர்-காப்பகங்கள்” என்று குறித்து, சுவிஸ்-தமிழ் சமூகத்தினர் பங்கேற்பார்.
இந்த நிகழ்வு, சுவிட்சர்லாந்தின் Migros Museum-ல் நடைபெறும் கண்காட்சியின் ஒரு பகுதியாகும், குறிப்பாக “Diaspora Activism” (புலம்பெயர் செயல்பாட்டியல்)
மற்றும் “Archives in Revolt” (கிளர்ச்சியில் ஆவணக்காப்பகங்கள்) என்ற பிரிவுகளின் சார்பாகவும் நடக்கிறது. அதாவது, அந்த அருங்காட்சியகம் நடக்கும் கண்காட்சியில், இந்த அமர்வு அதில் உள்ள ஒரு முக்கிய தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், மனித உரிமை நிபுணர் அனீனா மதிவண்ணன், கலைஞர் ஜனுஷா கெங்கநாதன், வரலாற்றாசிரியர் சாருஜன் தெய்வேந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். கலந்துரையாடலை சமூகவியலாளர் ஸ்வஸ்தி சிவசண்முகநாத சர்மா வழி நடத்துவார்.
தமிழ் ஆவணக்காப்பகங்கள் எவ்வாறு எதிர்ப்பு மற்றும் சமூக வலுப்படுத்தலின் கருவிகளாக இருக்கின்றன என்பதையும், அடையாளம், பண்பாட்டு வெளிப்பாடு, அரசியல் பங்கேற்பு என்பவை எவ்வாறு மறைக்கப்பட்ட வரலாற்றின் சாட்சியங்களாகவும் அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஆவணங்களாகப் பாதுகாக்கப்பட்டு வெளிப்படுகின்றன என்பதையும் விவாதிக்க படும். “Third Spaces” எனப்படும் ஆவணக்காப்பகங்கள் வெறும் சேமிப்பகங்கள் அல்ல; அவை அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மூன்றாம் நிலை வெளிகள். இங்கே மறைக்கப்பட்ட வரலாறுகள் மீட்கப்பட்டு, புதிய உரையாடல்கள் தொடங்குகின்றன.
மேலும், இது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழ் இளையோர், சுவிஸ்-தமிழ் இளம் தலைமுறை, அவர்களது வரலாற்று அனுபவங்கள், தனிப்பட்ட ஆவணக்காப்பகங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து பேச உள்ளனர்.
ஜனுஷா கெங்கநாதன் ஒரு கலைஞரும் கல்வியாளரும் ஆவார், அவர் “decoloniality” என்ற பின்னணியில் கதைசொல்லல் மற்றும் உலகக் கட்டமைப்பை ஆராய்கிறார். அவரது கலைப் பயிற்சியில் வரைதல் அடங்கும், அதன் மூலம் அவர் சிக்கலான கதைகளையும் “intersectional” கதைகளையும் ஆராய்கிறார். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுடனான தனது கலை மற்றும் கல்விப் பணியில், மாற்று யதார்த்தங்களை உருவாக்கவும், ஓரங்கட்டப்பட்ட குரல்களுக்குத் தரிசனம் அளிக்கவும், அவர் பங்கேற்பு மற்றும் ஊடாடும் கல்வி வடிவங்களை உருவாக்குகிறார்.
சாருஜன் தெய்வேந்திரன் ஒரு வரலாற்றாசிரியர் ஆவார். அவர் தற்போது ETH Zürich இல் உள்ள நவீன உலக வரலாற்றுப் பேராசிரியரகத்தில் ETH Decol திட்டத்தின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அவரது ஆராய்ச்சி முக்கியத்துவம் அறிவு மற்றும் அறிவியல் வரலாறு, உலக வரலாறு, "வளர்ச்சி மற்றும் நவீனத்துவம்" வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் வரலாறு ஆகியவற்றில் அமைந்துள்ளது.
அனீனா மதிவண்ணன் தற்போது பேர்ண் (Bern) பல்கலைக்கழகத்தில் இனவாதம் மற்றும் உயர்கல்வி தொடர்பான தலைப்பில் திட்டப் பணியாளராக பணியாற்றுகிறார். அதேசமயம், Amnesty International Schweiz அமைப்பில் மனித உரிமை கல்வித் துறையிலும் செயற்படுகிறார்.
ஜெனீவாவில் (Genf) சர்வதேச உறவுகள் (International Relations) துறையில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்ற பிறகு, தற்போது பாசலில் “Changing Societies: Migration – Conflicts – Resources” என்ற முதுகலை (M.A.) பட்டத்திற்கான படிப்பை தொடர்ந்து படித்து வருகிறார்.
மேலும், சுவிஸ்வாழ்த் தமிழ் மக்களின் வாழ்வியல்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு சங்கங்கள் மற்றும் திட்டங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
ஸ்வஸ்தி சிவசண்முகநாதசர்மா சூரிச்சில் வாழ்கிறார். அவர்கள் ஒரு எழுத்தாளர், செயற்பாட்டாளர் மற்றும் சமூகவியலாளர். அவர்களின் வேலை ஆய்வு, கலைப் பயிற்சி மற்றும் அரசியல் கல்வி ஆகியவற்றுக்கிடையில் நகர்கிறது. அவர்கள் சூரிச்சிலும் (Zürich) பாசலிலும் (Basel) சமூகவியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர் (B.A. und M.A.) அவர்கள் தற்போது பாசல் (Basel Universität) பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார்.
Download Calendar entry (ics)